ADDED : ஜூலை 14, 2026 06:44 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி; தர்மபுரி அடுத்துள்ள புலிகரை பஞ்., சங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்., தலைவர் ராஜாவின் மகன் கார்த்திக், 38. இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். தர்மபுரி - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் சங்கம்பட்டி அருகே, கார்த்திக் சிக்கன் கடை வைத்து நடத்தி வந்தார்.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தேசிய நெடுஞ்-சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திக் மீது மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரி-ழந்தார். மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்-கின்றனர்.
