ADDED : அக் 08, 2024 04:59 AM
அரூர்: தமிழகம்- கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கடந்தாண்டு, அக்., 7ல் பட்டாசு கடை மற்றும் கிடங்கில் ஏற்-பட்ட பயங்கர வெடி விபத்தில், தீயில் கருகி, 14 பேர் உடல் கருகி பலியாகினர்.
இதில், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த வேடப்பன், முனிவேல், இளம்பருதி, ஆகாஷ், ஆதிகே-சவன், விஜயராகவன், கிரி ஆகிய, 7 பேர் உயிரிழந்தனர்.இவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்-தது. அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சந்திரமோகன் தலைமையில், அக்கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் துாவி மரியாதை செலுத்தினர். அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்-குமார் தலைமையில், அ.தி.மு.க.,வினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். அதே போல், வி.சி., கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமையில், அக்கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அரசு பள்ளி மாணவர்கள்
