/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி வரையிலான சாலை விரிவாக்க பணியால் அவதி
/
ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி வரையிலான சாலை விரிவாக்க பணியால் அவதி
ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி வரையிலான சாலை விரிவாக்க பணியால் அவதி
ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி வரையிலான சாலை விரிவாக்க பணியால் அவதி
ADDED : பிப் 16, 2024 10:00 AM
பாப்பிரெட்டிப்பட்டி,; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி வரை சாலை விரிவாக்க பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல் சேலம் வரை, 4 வழி சாலை அமைக்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக வாணியம்பாடி முதல் அரூர் ஏ.பள்ளிப்பட்டி வரை, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடக்கிறது.
தற்போது மத்திய அரசு, 170 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி முதல் அயோத்தியாப்பட்டணம் வரை, 4 வழி சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதனால் ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரையிலான சாலையில் உள்ள பாலங்களை அகலப்படுத்தும் பணி முதற்கட்டமாக நடக்கிறது. அப்பணிக்காக சாலையோரம் குழிகள் தோண்டப்பட்டு, கான்கிரீட் அமைக்க கம்பிகள் கட்டப்பட்டுள்ளன.
பாலம் அமைக்கும் பணியால், குறுகிய சாலையாக மாறிய சாலை வழியாக, அவ்வழியே சென்று வரும் வாகனங்களால் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை போக்க போலீசார், நெடுஞ்சாலை துறையினர் எந்த முன்னெச்சரிக்கை பணிகளையும் செய்யவில்லை. இரவில் வரும் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மற்ற வாகனங்களை முந்தி செல்ல முற்படும்போது, விபத்தில் சிக்கி வருகின்றன. இதனால் காலை, மாலை, இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.