/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி வரையிலான சாலை; சேறும், சகதியுமாகி போக்குவரத்து பாதிப்பு

ADDED : மே 24, 2024 07:03 AM
பாப்பிரெட்டிப்பட்டி : திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல், சேலம் அயோத்தியாப்பட்டணம் வரை, 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
முதல்கட்டமாக வாணியம்பாடி முதல், அரூர் - ஏ.பள்ளிப்பட்டி வரை, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடக்கிறது. இவ்வழியாக தினமும், 1,000க்கும் மேற்பட்ட பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதையடுத்து ஏ.பள்ளிப்பட்டி முதல், மஞ்சவாடி கணவாய் வரை சாலையை விரிவுபடுத்தி, 4 வழிச்சாலை அமைக்க, மத்திய அரசு, 170 கோடி ரூபாய் ஒதுக்கியது. சாலை அமைக்கும் பணி கடந்த, 3 மாதங்களாக நடக்கிறது. அதற்காக சாலையில் புதிய பாலங்கள் அமைத்தும், சாலை அகலப்படுத்தும் பணியும் நடக்கிறது. இப்பணிக்காக தார்ச்சாலை தோண்டப்பட்டு மண் கொட்டப்படுகிறது. இதனால், பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால், சாலையில் மழைநீர் தேங்கி, சேரும் சகதியுமாக உள்ளது. அச்சாலையில், அதிக லோடு ஏற்றி வரும் லாரிகள் சேற்றில் சிக்கி கொள்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய நிலை உள்ளது. இது போன்று தினமும் போக்குவரத்து பாதிப்பால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலை அமைக்கும் பணியை விரைவு படுத்த, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.