/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மக்களின் தொடர் குற்றச்சாட்டு தேங்கிய கழிவுநீருக்கு தீர்வு
/
மக்களின் தொடர் குற்றச்சாட்டு தேங்கிய கழிவுநீருக்கு தீர்வு
மக்களின் தொடர் குற்றச்சாட்டு தேங்கிய கழிவுநீருக்கு தீர்வு
மக்களின் தொடர் குற்றச்சாட்டு தேங்கிய கழிவுநீருக்கு தீர்வு
ADDED : ஆக 31, 2025 03:55 AM
நல்லம்பள்ளி;நல்லம்பள்ளி
பி.டி.ஓ., அலுவலகம் முன், தேங்கி நின்ற கழிவுநீரால், தொற்றுநோய்
பரவும் அபாயம் ஏற்படுவதாக, பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டால், பஞ்.,
நிர்வாகம் சார்பில், அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
தர்மபுரி
மாவட்டம், நல்லம்பள்ளியில், பி.டி.ஓ., அலுவலகம் முன், கழிவுநீர்
கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில்
இருந்து வரும் கழிவுநீர், கடந்த சில மாதங்களாக குளம்போல் தேங்கி
நின்றது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், கொசுத்தொல்லை அதிகரித்தது.
இதில், பி.டி.ஓ., அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள், வணிக
நிறுவனங்களில் வேலை செய்வோர் என அனைவருக்கும், தொற்றுநோய் பரவும்
நிலை ஏற்பட்டது.
இது குறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சார்பில்,
கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை
எடுக்க தவறினால், மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளிக்கப்படும் என,
சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுடன் கூடிய தகவலை தெரிவித்தனர்.
இதனால், விழித்துக்கொண்ட நல்லம்பள்ளி பஞ்., நிர்வாகம் நேற்று
முன்தினம் முதல், கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரிசெய்து,
கழிவுநீர் தேங்காதவாறு சீரமைத்தனர்.

