/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து மழை வேண்டி வினோத வழிபாடு
/
சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து மழை வேண்டி வினோத வழிபாடு
சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து மழை வேண்டி வினோத வழிபாடு
சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து மழை வேண்டி வினோத வழிபாடு
ADDED : செப் 23, 2024 03:51 AM
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, கடும் வறட்சியால், மழை வேண்டி, சுடு-காட்டில் ஒப்பாரி வைத்து, பெண்கள் வழிபாடு நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மானியதஹள்ளி பஞ்., உட்பட்ட மேல்பூரிக்கல் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு அதிகப்படியாக, விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்து வருகின்றனர். 2 ஆண்டாக பருவ-மழை பெய்யாததால், விவசாயம் மற்றும் குடிநீருக்கும் பற்றாக்-குறை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். தென்மேற்கு பருவ மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், மானாவாரி சாகுப-டியை நம்பிய விவசாயிகள், வைகாசி பட்டத்தில், நிலக்கடலை பயிரிட்டனர். அறுவடைக்கு தயாராகிய நிலையில், மழையின்றி சாகுபடி செய்த நிலங்கள் வறண்டு கிடப்பதால், நிலக்கடலை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விலைக்கு டிராக்டர் நீரை வாங்கி, இரவு முழுவதும் செடிகளுக்கு பாய்ச்சி, பிறகு காலையில், நிலக்கடலையை அறு-வடை செய்கின்றனர்.
இதையடுத்து, ராபி பருவத்தில், மழை வந்தால் மட்டுமே விவ-சாயம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மேல்பூரிக்கல் பகுதியிலுள்ள, 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு அங்குள்ள சுடுகாட்டில் ஒன்று கூடி, ஒப்பாரி வைத்து மழை வேண்டி, வினோத வழிபாடு நடத்தினர். இவ்வாறு செய்தால், கிராமத்திற்கு மழை வரும் என, அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.