தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஈரோட்டில் ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம்

ஈரோட்டில் ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம்

ஈரோட்டில் ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம்


ADDED : ஆக 10, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோட்டில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.

ஆவணி மாத பவுர்ணமி திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் தினத்தை, ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் வேதங்கள் அவதரித்த நாளாகவும், மஹாவிஷ்ணு ஹயக்கிரீவராக அவதரித்த நாளாகவும், வேதங்களை அசுரர்களிடமிருந்து தேவர்கள் மீட்டதாக, புராணங்களில் கூறப்படுகிறது.

ஈரோடு கரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் ஆலயத்தில், பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய நிகழ்ச்சியில், வேத மந்திரங்கள் ஓதியபடி, கணபதி ஹோமம் நடைபெற்றது. மேலும், ராத்திரி சத்திரம், முளுபாகல் மடம் ஆகிய ராகவேந்திரர் கோவில்களிலும் பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது. ஏராளமான பிராமணர்கள் புது பூணுால் மாற்றிக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us