/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாயி தீக்குளித்த விவகாரம் தலைமறைவானவர் கைது
/
விவசாயி தீக்குளித்த விவகாரம் தலைமறைவானவர் கைது
ADDED : ஆக 05, 2025 01:35 AM
அதியமான்கோட்டை, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த விவசாயி தீக்குளித்து, சிகிச்சை பலனின்றி இறந்த விவகாரத்தில், 3 பேரை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன், 52. இவர், கடந்த ஜூன், 4 அன்று தன்னுடைய தேவைக்காக அடகு வைத்த, நில பத்திரம் மற்றும் பணத்தை வாங்கி கொண்டு, திருப்பி தர மறுத்த நபர்கள் மீது, புகார் அளிக்க எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தன் உடல் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் தீயை அனைத்து, உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, 60 சதவீத தீ காயங்களுடன் சிகிச்சை பெற்ற ஜெயராமன் ஜூன், 9ம் தேதியன்று உயிரிழந்தார்.
இது குறித்து, விசாரணை செய்து வந்த அதியமான்கோட்டை போலீசார் செல்வராஜ், 32, சந்தோஷ், 34 ஆகிய இருவரை, ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த அதியமான்கோட்டை அருகே, ஜாகிரியை சேர்ந்த சஞ்சீவன், 32 என்பவரை நேற்று கைது செய்தனர்.