/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூர் இரட்டை பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
/
தொப்பூர் இரட்டை பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : மே 07, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர்:நாக்பூரில் இருந்து கோயம்புத்துாருக்கு பஞ்சு பேல் ஏற்றிய லாரியை திருச்சி மாவட்டம், கருப்பம்பட்டியை சேர்ந்த டிரைவர் கோபி, 25, ஓட்டி வந்தார்.
லாரி நேற்று காலை, 6:00 மணிக்கு கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் இரட்டை பாலம் அருகே வந்தபோது, டிரைவரின்
கட்டுபாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொப்பூர் போலீசார் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் லாரி இடுபாடுகளில் சிக்கிய டிரைவரை காயமின்றி மீட்டனர். விபத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.