/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூரில் 4 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து
/
தொப்பூரில் 4 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து
ADDED : ஜன 20, 2024 07:47 AM
தர்மபுரி : பெங்களூரில் இருந்து சேலத்திற்கு பஞ்சு லோடு ஏற்றிக் கொண்டு வந்த, லாரியை சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்குமார், 43, ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் நேற்று காலை வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் பஸ் ஸ்டாப் அருகே முன்னால் சென்ற, 1 ஈச்சர் வாகனம், 3 லாரிகள், ஒரு ஸ்கூட்டர் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில், கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஞ்சு லோடு லாரி டிரைவர் மோகன்குமார், கிரானைட் லாரி டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நசீம், 24, மாற்று டிரைவர் திருமூர்த்தி, 27, மற்றும் ஸ்கூட்டரில் வந்த தர்மபுரி மாவட்டம், சவுளுப்பட்டியை சேர்ந்த ரமேஷ், 52, அவரது மனைவி பூங்கொடி, 46 உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்து தவித்தனர். தொப்பூர் போலீசார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து, விபத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தால் தர்மபுரி -- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.