/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
/
ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 09, 2024 06:07 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானுார், ஸ்ரீவெற்றி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளி மாணவி தாரணி, 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவர் பகவதி, 579 மதிப்பெண்கள் பெற்று, 2ம் இடத்தையும், மாணவர் பெசலேல், 577 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடத்தையும் பிடித்துள்ளார்.
முதல், 3 இடம் பிடித்த அவர்களை பள்ளி தாளாளர் நைனான், தீரன் சின்னமலை சேவை அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பழனிசாமி, பொருளாளர் வேணு, துணைத்தலைவர் டி.பழனிசாமி, துணைச்செயலாளர் குணசேகரன், பள்ளி முதல்வர் கலைவாணி, மேலாளர் கனி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர், பரிசு மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.மேலும், மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.