தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொப்பூர் சோதனைச்சாவடியில் கூடுதல் கண்காணிப்பு பணி

தொப்பூர் சோதனைச்சாவடியில் கூடுதல் கண்காணிப்பு பணி

தொப்பூர் சோதனைச்சாவடியில் கூடுதல் கண்காணிப்பு பணி


ADDED : மார் 19, 2026 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொப்பூர்:தொப்பூர் சோதனைச்சாவடியில், 'சிசிடிவி' கேமரா கண்கா-ணிப்புடன் தேர்தல் பறக்கும் படையினர், துணை ராணுவத்தினர் உதவியுடன் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்., 23ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, கடந்த, 15ம் தேதி முதல், தேர்தல் நடத்தை விதி-முறைகள் அமலுக்கு வந்தன.

தர்மபுரி மாவட்டத்தில், தொப்பூர், திப்பம்பட்டி, அனுமந்-தீர்த்தம், நரிபள்ளி, கோம்பூர், ராம்மூர்த்தி நகர், பெரும்பாலை, மடம், கும்பாரஹள்ளி, காடுசெட்டிப்பட்டி, நாய்குந்தி என, 11 இடங்களிலுள்ள நிலையான சோதனைச்சாவடிகளில் போலீசார், பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மாவட்ட எல்லையான தொப்பூர் காவலர் குடியி-ருப்பு அருகே, சோதனையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலை-மையில், 5க்கும் மேற்பட்ட போலீசார், 3 துணை ராணுவ படை-யினர், பறக்கும் படை அலுவலர்கள், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி, அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதித்து வருகின்றனர்.

இதை, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், துணை ராணுவ படையை சேர்ந்த உதவி கமிஷ்னர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கண்காணிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us