ADDED : ஏப் 22, 2026 02:54 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி அருணாசல ஐயர் சத்திரத்தில், நேற்று ஸ்ரீமத் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, 19ம் தேதி அதி-காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் ஹோமங்கள், அஷ்டோத்திர பூஜை நடந்தது.
அதிகாலை, 6:30 மணிக்கு சீனிவாசன் ஆதிசங்கரா மகிமை குறித்து உபன்யாசம் நடத்தினார். நேற்று அதிகாலையில் பரமேஷ்-வர பூஜையும், காலை, 7:00 மணிக்கு ஆச்சார்யாளுக்கு ருத்ர பாராயணம், அபிஷேகம் மற்றும் அலங்கார உபசார பூஜைகளும் அதை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் ஆதிசங்க-ரரை வழிபட்டனர். ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் வக்கீல் சாய்ராம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
