/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போச்சம்பள்ளியில் அ.தி.மு.க., செயல்வீரர் ஆலோசனை கூட்டம்
/
போச்சம்பள்ளியில் அ.தி.மு.க., செயல்வீரர் ஆலோசனை கூட்டம்
போச்சம்பள்ளியில் அ.தி.மு.க., செயல்வீரர் ஆலோசனை கூட்டம்
போச்சம்பள்ளியில் அ.தி.மு.க., செயல்வீரர் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 11, 2024 07:21 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, போச்சம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கட்சியின் வளர்ச்சி பணிகள், மக்கள் பணிகள் குறித்து, அ.தி.மு.க., சார்பில், செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், வேப்பனபள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி பேசுகையில், ''கூட்டணி பற்றி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் கவலைப்பட வேண்டும். நாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அ.தி.மு.க., தொண்டர்கள் தர்மத்திற்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். கிராமங்களில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட்டு, எந்த கட்சியையும் சாராதவர்களை இனம் கண்டு, நம் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி, அவர்களை நம் இயக்கத்தில் சேர்த்து ஓட்டளிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்,'' என்றார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்ச்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயபாலன், கிருஷ்ணன் மற்றும் துாயமணி உட்பட, 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.