/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள்
ADDED : பிப் 23, 2024 04:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் முனிகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு மாநில அரசின் வேளாண் வளர்ச்சி திட்டத்தில், வேளாண் கருவிகளான, ஒரு கடப்பாரை, ஒரு மண்வெட்டி, 2 களைத்துத்து, ஒரு பாண்டல், 2 அரிவாள் ஆகிய வேளாண் கருவிகள், மற்றும் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடிக்கு, ஒரு ஏக்கருக்கு, 8 கிலோ உளுந்து விதைகள், உயிர் உரங்கள், டிரைகோ டெர்மோ விரிடி, சூடோமோனஸ், ஜிங் சல்பேட், ஜிப்சம் மற்றும் ராகி ஏக்கருக்கு, 4 கிலோ விதை, தார்பாலின் ஆகியவையும், 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் அ.பள்ளிப்பட்டியில் செயல்படும், வேளாண் விரிவாக்க மையத்தையும், பொம்மிடி நடூரில் செயல்படும் துணை வேளாண் விரிவாக்க மையத்தையும் அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.