/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு
/
தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு
தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு
தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு
ADDED : டிச 09, 2024 07:45 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் ஏ.பள்ளிப்பட்டி ஊராட்சியில், கருங்கல்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள், விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கிராமத்தையொட்டி, 2 தனியார் கிரானைட் நிறுவனங்கள் உள்ளன. இங்கு, 24 மணி நேரமும் கல் அறுக்கும் பணி நடந்து வருகிறது. அதனால் ஏற்படும், அதிக இரைச்சலால் கிராம மக்கள், குழந்தைகள், உறங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோன்று, நிறுவனத்தில் இருந்து வெளிவரும் கல் துாசி மூலம், கிணற்று நீர் மாசடைகிறது. அனைத்து தரப்பினரும் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இங்கிருந்து வெளியேறும் கழிவுகள் விவசாய நிலங்களில் தேங்கி விவசாயமும், நிலத்தடி நீரும், கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.
நடவடிக்கை எடுக்க கடந்த, 2 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும், இதுவரை எவ்வித நட வடிக்கையும் இல்லை.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி சாரதி கூறுகையில், ''இந்த கிரானைட் நிறுவனத்தில் இருந்து, வெளியேறும் கழிவுகளால் நீர் மாசுபடுகிறது. இதை குடித்த கால்நடைகளில், 10க்கும் மேற்பட்டவை இறந்துள்ளன. புகார் கொடுத்தும் அதிகாரிகள் யாரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி விவசாயமும், மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். உயரதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.