ADDED : ஜூன் 24, 2026 05:29 AM

தர்மபுரி:தர்மபுரியில்,
100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தி, தமிழ்
மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம்
அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சிவன்
தலைமை வகித்தார். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் கலைச்செல்வம்
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர்
சின்னசாமி உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், மகாத்மா
காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை, மேலும் பலப்படுத்தி
தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். பதிவு செய்துள்ள தொழிலாளர்
அனைவருக்கும் ஆண்டுக்கு, 200 நாள் வேலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச
தினசரி ஊதியமாக, 700 ரூபாய்- வழங்க வேண்டும். விபி ராம்ஜி என்ற புதிய
சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கே.ஒய்.சி., பயோ மெட்டரிக்
பதிவு போன்ற உயர் தொழில்நுட்ப பதிவுகள் செய்ய வேண்டும். கிராம பஞ்.,கள்
மற்றும் மாநில உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். பணியிடத்தில்
உயிரிழப்பு ஏற்பட்டால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு, 10 லட்சம்
ரூபாய் இழப்பீடு வழங்கும் வகையில், திருத்தம் செய்ய வேண்டும்.
இத்திட்டத்தை நகராட்சி, பேரூராட்சிகளில் விரிவுபடுத்த வேண்டும்,
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
