தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் வி.சி.க.,வினர் வாக்குவாதம்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் வி.சி.க.,வினர் வாக்குவாதம்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் வி.சி.க.,வினர் வாக்குவாதம்


ADDED : ஏப் 24, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட-சபை தொகுதிக்கு உட்பட்ட மோளையானுாரில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடி மையத்தில் நேற்று மதியம் பாப்பிரெட்டிப்பட்டி சிட்டிங், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு..க., வேட்பாளர் மரகதம் வெற்றிவேலின், ஓட்டுப்பதிவு பொது முகவரு-மான கோவிந்தசாமி ஆய்வு செய்தார். பின், ஓட்டு பதிவு மையம் அருகே தேர்தல் விதிமுறைகள் மீறி, தி.மு.க., மற்றும் வி.சி.,கட்சியினர், 'உதய-சூரியன்' சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பதாக போலீசிடம்

புகார் தெரிவித்தார்.

அங்கு வந்த மோளையானுாரை சேர்ந்த, தி.மு.க., மற்றும் வி.சி.,க்கள் சிலர், எம்.எல்.ஏ, - கோவிந்தசாமியிடம், 'இந்த ஊருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள், இங்கு எதற்கு வந்தீர்கள்' எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்-போது கோவிந்தசாமி, 'நான், அ.தி.மு.க., வேட்-பாளரின் பொது முகவர் நான், வருவேன்' என பதி-லளித்தார். இதனால் அங்கு வி.சி.,க்களுக்கும், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தரப்பினருக்கும் வாக்கு வாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து எம்.எல்.ஏ., கோவிந்தசாமியை சிலர் தாக்க முற்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அங்கு வந்த போலீசார், இரு தரப்பி-னரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us