தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அ.தி.மு.க., கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 18, 2026 08:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 08:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, அ.தி.மு.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர், அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி வரவேற்று பேசினார்.

தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் பாலியல் வன்கொடு-மைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய, ஸ்டாலின் தலைமையி-லான, தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில், அரூர், அ.தி.மு.க. - எம்.எல்.ஏ., சம்பத்குமார், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன், அ.ம.மு.க., தலைமை நிலைய செயலாளர் ராஜேந்-திரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us