/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கட்சி கொடி கம்பம் பீடம் இடிப்பு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., புகார்
/
கட்சி கொடி கம்பம் பீடம் இடிப்பு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., புகார்
கட்சி கொடி கம்பம் பீடம் இடிப்பு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., புகார்
கட்சி கொடி கம்பம் பீடம் இடிப்பு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., புகார்
ADDED : நவ 20, 2024 01:47 AM
அரூர், நவ. 20-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடியில், மின்வாரிய அலுவலகம் அருகில் இருந்த, தி.மு.க., - அ.தி.மு.க., கொடி கம்பங்கள் கடந்த லோக்சபா தேர்தலின் போது அகற்றப்பட்டன. தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க.,வினர் தங்களது கொடி கம்பத்தை மின்வாரிய அலுவலக நுழைவாயில் முன் அமைத்தனர். அ.தி.மு.க.,வினர் பஸ் ஸ்டாப் அருகே புதிதாக கொடி கம்பம் அமைக்க பீடம் அமைத்தனர். இதற்கு அனுமதியில்லை என நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமையில், அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடிக்கம்ப பீடம் இடிக்கப்பட்டது.
இது குறித்து சம்பத்குமார் எம்.எல்.ஏ., கூறுகையில், ''பழைய கொடி கம்பத்திற்கு மாற்றாக, புதிதாக கொடி கம்பம் பீடம் அமைக்க ஆர்.டி.ஓ.,விடம் முறையாக விண்ணப்பித்தோம். மேலும், 2 நாட்கள் அவகாசம் கொடுங்கள், நாங்களே பீடத்தை அகற்றி விடுகிறோம் என, போலீஸ் மற்றும் வருவாய்த்
துறையினரிடம் தெரிவித்தோம். ஆனால், நேற்று முன்தினம் இரவே, கொடி கம்பம் பீடம் இடிக்கப்பட்டுள்ளது. பீடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.

