ADDED : பிப் 12, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
பாகலுார்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுாரில் வடக்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதேபோல் ஓசூர் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓசூரில் தனித் தனியாக நடந்தன. கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர், கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய, துண்டு பிரசுரங்களை கட்சியினருக்கு வழங்கி, வீடு, வீடாக சென்று, துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்ட, கேட்டுக் கொண்டனர்.
