தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்-பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்-பாட்டம்
ADDED : பிப் 14, 2026 07:01 AM

தர்மபுரி; தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஓ., அலுவலகங்கள் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி டவுனில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அ.தி.மு.க., நகர செயலாளர் பூக்கடை ரவி முன்-னிலை வகித்தார். பாலக்கோடு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும் அ.தி.மு.க., மாவட்ட செயலாளரு-மான அன்பழகன் தலைமை வகித்து பேசினார். இதில், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் கிரா-மபுற மக்களுக்கான, 125 நாள் வேலை உறுதிய-ளிப்பு திட்டத்தை, சீர்குலைக்க முயலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை கண்டித்து, கண்டன கோஷம் எழுப்பினர். மேலும், தமிழக மக்களுக்கு நிறைவேற்ற முடியாத பொய்-யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க., அரசு கடந்த, 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி விட்ட-தாக பேசினர். இதேபோல், நல்லம்பள்ளி, பி.டி.ஓ., அலுவலகம், பாலக்கோடு, அரூர், மொரப்பூர், காரிமங்கலம், கடத்துார், ஏரியூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி என, 10 ஊராட்சி ஒன்றியங்-களில் பி.டி.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன், பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ்வரன், அர-சாங்கம், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் ஒன்றிய அலுவ-லகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், மதிவாணன் தலைமை வகித்தனர். அ.தி.மு.க., ---எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தலைமையில், தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன.
* அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செய-லாளர் பசுபதி தலைமை வகித்தார். இதில், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார், நகர செயலாளர் பாபு மற்றும் பா.ம.க., - பா.ஜ., - அ.ம.மு.க., -த.மா.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அரசை கண்-டித்து கோஷங்களை எழுப்பினர்
