தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்


ADDED : மே 06, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்; அரூர் நகர பகுதியின் வழியாக, தினமும், திரு-வண்ணாமலை, திருப்பத்துார், தர்மபுரி, சென்னை, ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்-களுக்கு, 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. இவற்றில், தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள் உபயோகம் அதிக-ளவில் உள்ளது.

அரூர் நகர பகுதிக்குள் அதிவே-கத்துடன் வரும் அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்-டுனர்கள் ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் அதிகப்படியான ஒலியால் முதியோர், நோயாளிகள் உட்பட பலர் கடுமையாக பாதிக்கப்-படுகின்றனர். மேலும், டூவீலரில் செல்வோர் அதிர்ச்சியடைந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மோட்டார் வாகன அதிகாரிகள் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தும் வாகனங்களை கண்ட-றிந்து நடவடிக்கை எடுக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த செய்தி நம், 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த, ஏப்., 26ல் வெளியானது.நேற்று, அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் தர-ணீதர், அரூர் பஸ் ஸ்டாண்டில் ஏர் ஹாரன் தொடர்பான வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, 6 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்-பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பஸ் ஓட்டுனர்களிடம் பேசிய, மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், காது-களை பாழ்படுத்தும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்து-வதை தவிர்க்க வேண்டும். பஸ் இயக்கும் டிரை-வருக்கும், இதனால் பாதிப்பு ஏற்படும். அதே போல், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்-படுத்துவதால் ஏற்படும், காற்று மாசுபடுதல் உள்-ளிட்ட பல்வேறு பாதிப்புகளை அவர்களிடம் விளக்கினார். பின், பஸ் ஓட்டுனர்கள் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த மாட்டோம் என, உறுதிமொழி ஏற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us