/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு
/
அரூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு
அரூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு
அரூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு
ADDED : ஜன 13, 2025 02:31 AM
அரூர்: அரூர் கடைவீதி மற்றும் மஜீத்தெருவில், வணிக நிறுவனங்கள், ஜவுளி மற்றும் நகைக் கடைகள் உள்ளன. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை, பூஜை பொருட்கள் உள்ளிட்-டவற்றை வாங்க, கடந்த சில நாட்களாக மக்கள் அதிகளவில் வரு-வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், கடைவீதியில் இருந்து, மாரியம்மன் கோவில் தெரு வரை மற்றும் மஜீத்தெருவில் சாலையின் நடுவில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், நான்கு சக்-கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரி-சலில் திருட்டு, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.