/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாக்கனுார் துணிகட்டி மாரியம்மன் கோவிலில் அம்மன் தாலி திருட்டு
/
மாக்கனுார் துணிகட்டி மாரியம்மன் கோவிலில் அம்மன் தாலி திருட்டு
மாக்கனுார் துணிகட்டி மாரியம்மன் கோவிலில் அம்மன் தாலி திருட்டு
மாக்கனுார் துணிகட்டி மாரியம்மன் கோவிலில் அம்மன் தாலி திருட்டு
ADDED : ஜன 26, 2025 04:35 AM
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனுார் துணிகட்டி மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் சாமி சிலை மீது இருந்த தங்கத்தாலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள மாக்கனுாரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள துணிகட்டி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழவை இரவு கோவிலின் மரக்கதவை உடைத்து, அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடியுள்-ளனர். மேலும், மூலவர் அறையின் கேட்டை உடைத்து சாமி கழுத்தில் இருந்த கால் பவுன் தங்கத்தாலி மற்றும் உற்சவர் கழுத்தில் இருந்த கால் பவுன் தங்கத்தாலியை திருடிசென்றுள்-ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.