/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு
/
கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு
ADDED : நவ 22, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, பொடுத்தம்பட்டி சவுளுர் கிராமத்தில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், புதிதாக மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இங்கு, கடந்த, 19 மாலை பூசாரி வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்த நிலையில் கிடந்தன. உள்ளே சென்று பார்த்ததில் மாரியம்மன் கழுத்தில் அணிவித்திருந்த, 10 கிராம் தாலி திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து, மந்திரி கவுண்டர் கோபால் அளித்த புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

