/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரிமங்கலத்தில் வயதான தம்பதியிடம் கத்தியை காட்டி பணம், நகை பறிப்பு
/
காரிமங்கலத்தில் வயதான தம்பதியிடம் கத்தியை காட்டி பணம், நகை பறிப்பு
காரிமங்கலத்தில் வயதான தம்பதியிடம் கத்தியை காட்டி பணம், நகை பறிப்பு
காரிமங்கலத்தில் வயதான தம்பதியிடம் கத்தியை காட்டி பணம், நகை பறிப்பு
ADDED : ஜன 12, 2024 05:29 PM
காரிமங்கலம் : காரிமங்கலம் அருகே, வீட்டில் இருந்த வயதான தம்பதிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை மர்ம கும்பல் பறித்து சென்றது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சென்னகேசவன், 80; இவரது மனைவி தனபாக்கியம், 63. இருவரும் விவசாயம் செய்து கொண்டு, அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த, 10 அன்று இரவு, 11:00 மணிக்கு தம்பதியினரின் வீட்டின் அருகே பைக்கில் வந்த, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் தனபாக்கியம், சென்னகேசவன் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி, தனபாக்கியத்திடம் இருந்த தாலி உட்பட மூன்று பவுன் நகை, சென்னகேசவன் வைத்திருந்த, 22 ஆயிரத்து, 500 ரூபாய் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர். கூச்சலிட்டால், கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டி சென்னகேசவனை தாக்கியுள்ளனர்.
இது குறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.