/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் சாலையில் சுற்றித்திரிந்த யானை
/
ஒகேனக்கல் சாலையில் சுற்றித்திரிந்த யானை
ADDED : மார் 01, 2024 02:23 AM
பென்னாகரம்:ஒகேனக்கல் செல்லும் சாலையோரமாக சுற்றித்திரியும் ஒற்றை யானையால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
தர்மபுரி
மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் அதிகளவில் யானைகள்
உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால், இப்பகுதியில் கடும் வறட்சி
நிலவி வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி வனப்பகுதியிலிருந்தும்
ஏராளமான யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு படையெடுத்த வண்ணம்
உள்ளன. இந்த யானைகள் ஆற்றங்கரையோரத்தில் தண்ணீர் தேடியும்,
கிராமப்புறங்களில் உணவு தேடியும் சுற்றித்திரிகின்றன.
ஒகேனக்கல்,
தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு வார
விடுமுறை தினங்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து
செல்கின்றனர். இந்நிலையில் நேற்று, ஒகேனக்கலில் இருந்து பென்னாகரம்
செல்லும் வனப்பகுதியான பன்னப்பட்டி எண்ணுமிடத்தில், ஒற்றை ஆண்
யானை சுற்றித்திரிந்தது. சாலையின் குறுக்கே அங்கும் இங்குமாக சென்று
வந்தது. இதனால் அவ்வழியே சென்ற டூவீலர் மற்றும் கார்களில் வந்த
சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.

