/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பென்னாகரம் அருகே பழமையான லட்சுமி நரசிம்ம சுவாமி தேர் திருவிழா
/
பென்னாகரம் அருகே பழமையான லட்சுமி நரசிம்ம சுவாமி தேர் திருவிழா
பென்னாகரம் அருகே பழமையான லட்சுமி நரசிம்ம சுவாமி தேர் திருவிழா
பென்னாகரம் அருகே பழமையான லட்சுமி நரசிம்ம சுவாமி தேர் திருவிழா
ADDED : மே 24, 2024 07:02 AM
பென்னாகரம் : தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த அளேபுரத்திலுள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது.
இக்கோவில் திருவிழா கடந்த, 17ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம், திருக்கல்யாண உற்சவம், கருட உற்சவம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று, மலர்கள் மற்றும் துணிகளால் அலங்கரித்த தேருக்கு தீபாராதனை காண்பித்து, அளேபுரம், பொச்சாரம்பட்டி, கே.அக்ரஹாரம், குள்ளாத்திரம்பட்டி, மல்லாபுரம், மடம், கூத்தப்பாடி, நாச்சானுார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இணைந்து, மதியம் 1:00 மணிக்கு தேர் வடத்தை பிடித்து இழுத்தனர்.
இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேர் இழுத்து, சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.