தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அங்கன்வாடி ஊழியர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 25, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி-யாளர்கள் சங்கம் சார்பில், நேற்று மாநிலம் தழு-விய மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரூர் வட்டார தலைவர் கோமதி தலைமை வகித்தார். இதில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அடிப்படை ஊதியம், 18,000 ரூபாய் என்ற அரசின் தேர்தல் கால வாக்குறுதியை உட-னடியாக அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு வழங்-கப்படும் ஆண்டு பராமரிப்பு செலவின தொகையை பணியாளரிடமே வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் மகப்-பேறு விடுப்பை, 12 மாத காலமாக உயர்த்தி வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us