/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2025 08:11 AM

தர்மபுரி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்ததது. இதில், மாவட்ட தலைவர் ராஜம்மாள் தலைமை வகித்தார். சமூக நலத்துறையில், காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தேவி, மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி முன்னிலை வகித்தார்.
அங்கன்வாடி மையத்திற்கு வரும், முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு முகப்பதிவு போட்டோ எடுத்து கட்டாயம் போட வேண்டும் என்ற திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.