தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு

அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு

அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு


ADDED : பிப் 04, 2026 11:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 11:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 57வது நினைவு தினம் நேற்று, அ.தி.மு.க., சார்பில், தர்மபுரி நான்கு ரோட்டிலுள்ள அவரது சிலைக்கு, தர்மபுரி மாவட்ட செயலாளரும், பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் தலைமையில், கட்சியினர், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

இதில், ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிபட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, நகர செயலாளர் பூகடை ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.* தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.,யுமான மணி தலைமையில், தி.மு.க.,வினர் தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் இருந்து, நான்கு ரோட்டிலுள்ள அண்ணாதுரை சிலை வரை ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மாவட்ட முன்னாள் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் தர்மசெல்வன், நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கவுதம், இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

* அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, அரூர் நகர செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* அரூர் கச்சேரிமேட்டில், தி.மு.க., சார்பில், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.

* பென்னாகரம், அ.தி.மு.க., சார்பில் பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அன்பு முன்னிலை வகித்தார். அக்கட்சியின் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் அண்ணாதுரையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us