/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
ADDED : ஜூலை 21, 2024 10:58 AM
தர்மபுரி: தர்மபுரி, அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில், தமிழ்நாடு தொலைத்தொடர்பு கணக்கு மற்றும் நிதி பிரிவு அதிகாரிகள் நல அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியை கலைச்செல்வி தலைமை வகித்தார்.இதில், மாவட்டத்தில் சித்தேரி,நரிப்பள்ளி, பிக்கிலி கொல்லப்பட்டி, கிருஷ்ணாபுரம், பொம்மஹல்லி, அதகப்பாடி, இலக்கியம் பட்டி அரசு காது கேளாதோர் பள்ளி, அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய, 8 அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதன்படி, முதல் இடம் பெற்றவர்களுக்கு, 2,500 ரூபாய், 2ம் இடத்துக்கு, 2,000, 3ம் இடத்துக்கு, 1,500 ரூபாய் என மொத்தம், 50,000 ரூபாய் வழங்கப்பட்டது.