/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டிவி'யில் அதிக சத்தத்தால் தகராறு
/
டிவி'யில் அதிக சத்தத்தால் தகராறு
ADDED : டிச 13, 2024 01:14 AM
டிவி'யில் அதிக சத்தத்தால் தகராறு
பாலக்கோடு, டிச. 13-
பாலக்கோடு அடுத்த மங்களப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், 39. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 7-ல் இரவு வீட்டில், 'டிவி' பார்த்து கொண்டிருந்தார். அப்போது, 'டிவி'யில் அதிக சத்தம் வருவதாக கூறி, பக்கத்து வீட்டை சேர்ந்த சூர்யா, 24 என்பவர் கண்ணனை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், கண்ணன் மற்றும் அவரது தம்பி நவீன்குமார், 20, ஆகியோர் சூர்யாவை இரும்பு ராடால் தாக்கி உள்ளனர். பதிலுக்கு சூர்யாவும், இரும்பு ராடால் இருவரையும் தாக்கி உள்ளார். இரு தரப்பினரும் கொடுத்த புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், அடிதடியில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து, பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

