தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'அரூர் தி.மு.க., வேட்பாளர் அப்பாவியாக தெரிகிறார்'

'அரூர் தி.மு.க., வேட்பாளர் அப்பாவியாக தெரிகிறார்'

'அரூர் தி.மு.க., வேட்பாளர் அப்பாவியாக தெரிகிறார்'


ADDED : ஏப் 10, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர் :''அரூர் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் அப்பாவியாக தெரிகிறார்,'' என, அமைச்சர் வேலு பேசினார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் சண்முகத்தின் அறிமுக கூட்டம் அரூரில் நடந்தது. இதில், தி.மு.க., வடக்கு மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான வேலு பேசியதாவது:

தமிழகத்தில் இப்போது அமைந்துள்ளதுபோல், மெகா கூட்டணி எப்போதும் அமையவில்லை. அதனால்தான், சமூக வலைதளங்களில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். மத்திய, பா.ஜ., அரசு கல்வி நிதி உள்ளிட்ட நிதிகளை வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது. ஜி.எஸ்.டி., வரி வசூலிப்பில், உத்தரப்பிரதேசம், பீஹார், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக பங்கை வழங்குகிறது. மாறாக, தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய பங்கை வழங்காமல், குறைவாக வழங்குகின்றனர். இது தமிழகத்திற்கும், டில்லிக்கும் நடக்கும் தேர்தல், எனவே, கட்சியை பார்க்காமல் அனைவரும் ஒன்றுபட்டு, தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அரூர் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் சண்முகம் அப்பாவியாக தெரிகிறார். அவரை, 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us