ADDED : ஆக 31, 2025 04:00 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்டம், நடுப்பையூர் குறுவள மையத்திற்கு, தேவர்முக்குளம் அரசு
நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. அரசு தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகள் என, 11 பள்ளிகள் பங்கேற்றன. இதில், நடுப்பையூர்
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமார், வட்டார வளமைய
மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தேவர்
முக்குளம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், கரடி அள்ளி
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாணிஸ்ரீ ஆகியோர் அமைப்பாளராக
செயல்பட்டனர். இதில், பள்ளி அளவில் முதலிடம் இடம் பிடித்த
மாணவர்களுக்கு, பசுமையும், பாரம்பரியமும் என்ற தலைப்பில்
ஒப்புவித்தல் போட்டி, மழலையர் பாடல்கள், கதை கூறுதல், களிமண்
பொம்மைகள் செய்தல், மாறுவேட போட்டி, வண்ணம் தீட்டுதல், திருக்குறள்
ஒப்புவித்தல், தனிநபர் நடிப்பு, தேசபக்தி பாடல்கள், தனி நபர் மற்றும்
குழு நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், போச்சு போட்டி, மெல்லிசை
பாடல்கள் போன்ற தலைப்புகளில், 250 மாணவ, மாணவியர் தங்களின் திறமைகளை
வெளிப்படுத்தினர்.