/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பி.எம்., கிசான் திட்டத்தில் இணைந்து பயன்பெற உதவி இயக்குனர் அழைப்பு
/
பி.எம்., கிசான் திட்டத்தில் இணைந்து பயன்பெற உதவி இயக்குனர் அழைப்பு
பி.எம்., கிசான் திட்டத்தில் இணைந்து பயன்பெற உதவி இயக்குனர் அழைப்பு
பி.எம்., கிசான் திட்டத்தில் இணைந்து பயன்பெற உதவி இயக்குனர் அழைப்பு
ADDED : மே 17, 2025 01:45 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், பி.எம்., கிசான் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என, வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதம மந்திரி விவசாய கவுரவ நிதி உதவி திட்டம் என்னும், பி.எம்., கிசான் திட்டத்தின் மூலம், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக ஒரு ஆண்டிற்கு, 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன்பெற கடந்த, 2019 பிப்., 1க்கு முன்னர் நிலம் தன் பெயரில் பதிவு பெற்றுள்ள விவசாயிகள், அருகில் உள்ள மக்கள் கணினி மையத்தை அணுகி பி.எம்., கிசான் சுயபதிவு பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
குடும்பத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த பணியில் உள்ள உறுப்பினர்கள், இத்திட்டத்தில் பயன்பெற இயலாது. குடும்பத்தில் யாராவது பதிவு பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்கள் அதாவது மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற பட்டப் படிப்புகள் முடித்து பதிவு செய்த நபர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.
குடும்பத்தில் உள்ள ஒருவர் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், தனித்தனியே நில உடமை வைத்திருந்தாலும், ஒருவர் மட்டுமே பயன்பெற முடியும். தகுதியுள்ள விவசாயிகள் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் மே, 30 வரை நடக்கும் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.