/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் மாநில சாதனை
/
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் மாநில சாதனை
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் மாநில சாதனை
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் மாநில சாதனை
ADDED : மார் 05, 2024 12:16 PM
ஊத்தங்கரை: சென்னை தயான் சந்த் விளையாட்டு பயிற்சி கூடத்தில் நடந்த மாநில வில்வித்தை போட்டியில், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து, 39 மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று, அதிகளவு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப், 'தயான் சந்த்' கோப்பையை வென்று சாதனை புரிந்தனர்.
சாதனை புரிந்த மாணவ, மாணவியரை சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால் முருகன், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஷோபாதிருமால் முருகன், நிர்வாக அலுவலர் கணபதி ராமன் மற்றும் அதியமான் பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஷ் சான்றிதழ் வழங்கி, பரிசளித்து பாராட்டினர்.
மேலும், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்பயிற்சி ஆசிரியர்களை பாராட்டினர்.