/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'சட்டசபை தேர்தலில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் போட்டியிட முயற்சி'
/
'சட்டசபை தேர்தலில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் போட்டியிட முயற்சி'
'சட்டசபை தேர்தலில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் போட்டியிட முயற்சி'
'சட்டசபை தேர்தலில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில் போட்டியிட முயற்சி'
ADDED : செப் 04, 2025 01:20 AM
தர்மபுரி, ''தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், காங்., கட்சி சார்பில், குறைந்தது ஒரு தொகுதியில் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என, தமிழக, காங்., கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு கூறினார்.
தர்மபுரியில் நேற்று நடந்த, காங்., கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர், முன்னதாக, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், காங்., -- தி.மு.க., கூட்டணி கொள்கை கூட்டணி. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்., போட்டியிடும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்து, எதிர்க்கட்சிகளாக உள்ள, அ.தி.மு.க., -பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினால், இந்திய அளவில், தமிழகம் வளர்ச்சியடைந்த, முதல் மாநிலமாக உள்ளது. ராகுலால் மத்திய, பா.ஜ., அரசுக்கு நெருக்கடி ஏற்படுவதால், அவர் மீது குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். பிரதமர் மோடியின் தாய் குறித்து, அவதுாறாக பேசியவர், காங்., கட்சியை சேர்ந்தவர் இல்லை என, ஏற்கனவே தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலில், தர்மபுரி மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில், ஒரு தொகுதியில் கூட, காங்., கட்சி போட்டியிடவில்லை. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், காங்., கட்சி சார்பில், குறைந்தது ஒரு தொகுதியில் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
அப்போது, தர்மபுரி மாவட்ட, காங்., தலைவர் தீர்த்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.