/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண் மீது சுடு தண்ணீர் ஊற்றி கொல்ல முயற்சி: டி.ஐ.ஜி.,யிடம் புகார்
/
பெண் மீது சுடு தண்ணீர் ஊற்றி கொல்ல முயற்சி: டி.ஐ.ஜி.,யிடம் புகார்
பெண் மீது சுடு தண்ணீர் ஊற்றி கொல்ல முயற்சி: டி.ஐ.ஜி.,யிடம் புகார்
பெண் மீது சுடு தண்ணீர் ஊற்றி கொல்ல முயற்சி: டி.ஐ.ஜி.,யிடம் புகார்
ADDED : நவ 01, 2025 01:37 AM
சேலம், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி எருமப்பட்டி கொட்டாய் ஜருகு பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் இளங்கோ. இவரது மனைவி அருணா, 35. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இளங்கோவின் தந்தை சின்னதம்பி தனது மனைவியுடன் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சரக டி.ஐ.ஜி., பொறுப்பில் உள்ள அனில்குமார் கிரியிடம் புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: என் மகன் இளங்கோவின் மனைவி அருணா, அவரது தந்தை கோபால், இவர் தனது அண்ணன், தம்பியுடன் ஒரே நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கோபால் தனது மகள் அருணாவிற்கு, 1 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்திருந்தார். அதன் பின்னர் கோபால் இறந்துவிட்டார். இதையடுத்து அருணாவின் அண்ணன் முத்துராமன், அருணாவிற்கு எழுதி வைத்திருந்த, 1 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். தந்தை எழுதி கொடுத்த நிலத்தில் அருணா குடியிருந்து வந்தார். அவரை வெளியேற்றும் முயற்சியில் முத்துராமன் ஈடுபட்டார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அருணாவை, முத்துராமன் கொலை செய்ய திட்டம் தீட்டி, அருணாவை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்றார். ஆனால் அந்த விபத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். இது குறித்து தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் அருணா சமையல் செய்து கொண்டிருந்த போது முத்துராமன் தரப்பினர் கொதிக்கும் தண்ணீரை அருணா மீது ஊற்றினர். இதில் பலத்த காயமடைந்த அருணா தர்மபுரி அரசு மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை என் மகன் இளங்கோ கவனித்து வருகிறார். மருமகளை கொல்ல முயன்ற அருணாவின் அண்ணன் முத்துராமன், அவரது உறவினர் செல்வம் உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

