/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கலெக்டர் அலுவலகத்தில் பஞ்., துணை தலைவர் தீக்குளிக்க முயற்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் பஞ்., துணை தலைவர் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் அலுவலகத்தில் பஞ்., துணை தலைவர் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் அலுவலகத்தில் பஞ்., துணை தலைவர் தீக்குளிக்க முயற்சி
ADDED : டிச 22, 2024 01:29 AM
கலெக்டர் அலுவலகத்தில் பஞ்., துணை தலைவர் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி, டிச. 22-
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று, பஞ்., துணை தலைவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணியம்பாடி பஞ்., தலைவராக மஞ்சுளாவும், துணை தலைவராக ராசாத்தியும் உள்ளனர். பஞ்., தலைவர் மஞ்சுளாவின் செயல்பாடுகளை கண்டித்து, துணைத்தலைவர் ராசாத்தி நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து
மீட்டனர். விசாரணையில், பஞ்., செலவின வரவு, செலவு பெறுவதற்கான துணை தலைவர் ராசாத்தியின், 'செக் பவர்' பஞ்., உறுப்பினர்கள் ஆதரவுடன் கடந்த, 13ம் தேதியன்று ரத்து செய்யப்பட்டது தெரிந்தது. இதனால் விரக்தியடைந்த அவர், தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இன்னும், 15 நாட்களில் பஞ்., தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்களின் பதவி காலம் முடிய உள்ள நிலையில், பஞ்., துணைத்தலைவர் நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து, மணியம்பாடி பஞ்., தலைவர் மஞ்சுளாவிடம் கேட்டபோது, ''துணை தலைவர் ராசாத்தியின் மகன் செல்வம், பஞ்., நிர்வாகத்தில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடந்த, 4 ஆண்டுகளாக செயல்பட்டார். இதனால் பஞ்., நிர்வாகத்தில் எப்பணியும் செய்ய முடியாமல் முடங்கியது. இது குறித்து, மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று, முறையாக தீர்மானம் நிறைவேற்றி, துணை தலைவரின், 'செக் பவர்' ரத்து செய்யப்பட்டது,'' என்றார்.