/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டுக்கூடு அங்காடியில் ரூ.1.49 லட்சத்துக்கு ஏலம்
/
பட்டுக்கூடு அங்காடியில் ரூ.1.49 லட்சத்துக்கு ஏலம்
ADDED : பிப் 12, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், கடந்த வாரத்தில், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில், நேற்று முன்தினம், 17 பேரும் நேற்று, 4 பேர் மட்டுமே ஏலத்துக்கு வந்திருந்தனர்.
இவர்கள், 6 குவியல்களாக, 208 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 728 முதல், 742 ரூபாய் வரை சராசரியாக, 735 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 1.49 லட்சம் ரூபாய். நேற்று நடந்த ஏலத்தில் அரசுக்கு, 2,240 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

