/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு
/
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு
ADDED : அக் 17, 2024 01:31 AM
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 17---
பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை சார்பில், அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமையில், தாசில்தார் வள்ளி, பேரூராட்சி தலைவர் மாரி, செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பொதுமக்களுக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களுக்கு தளவாடங்கள் உபயோகிக்கும் முறை குறித்து, செயல்விளக்கம் அளித்தனர்.
மழை, ஆபத்து காலங்களில் எப்படி பாதுகாப்பது, மழை காலத்தில், கால், இடுப்பு எலும்பு உடைந்தவரை தீயணைப்பு வீரர்கள் எவ்வாறு காப்பாற்றுவார்கள் என ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆற்றோர பகுதியில் வசிக்கும் மக்கள், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆறு, ஏரி, அணை பகுதியில் துணி துவைக்க செல்வதை தவிர்க்க வேண்டும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நிற்பதையும், மின்சாரம், மொபைல்போன் பயன்படுத்துவதையும் தவிர்க்க அறிவுறுத்தினர். பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்தும், செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், துணை தாசில்தார் சக்திவேல், ஆர்.ஐ., கார்த்திக், வி.ஏ.ஓ., நித்யா உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.