/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளியில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்
/
பள்ளியில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்
பள்ளியில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்
பள்ளியில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 27, 2024 01:18 AM
பள்ளியில் போதை பொருட்கள்
குறித்த விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணராயபுரம், நவ. 27-
கிருஷ்ணராயபுரம் வட்டார, உணவு பாதுகாப்புத்துறை சார்பில், பள்ளி மாணவர்களிடம் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த, விழிப்புணர்வு முகாம் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம், டவுன் பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து
கொண்டனர்.