/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குழந்தை திருமண தடை சட்டம் குறித்து கல்லுாரியில் விழிப்புணர்வு
/
குழந்தை திருமண தடை சட்டம் குறித்து கல்லுாரியில் விழிப்புணர்வு
குழந்தை திருமண தடை சட்டம் குறித்து கல்லுாரியில் விழிப்புணர்வு
குழந்தை திருமண தடை சட்டம் குறித்து கல்லுாரியில் விழிப்புணர்வு
ADDED : நவ 29, 2025 01:07 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தார். தமிழ் ஆய்வுத்துறை விரிவுரையாளர் ஜஸ்டினா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான தடை சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.
தொடர்ந்து, குழந்தை திருமண தடை சட்டம் குறித்த உறுதிமொழியை மாணவ, மாணவியர் எடுத்து கொண்டனர். ஆசிரியர்கள் சுந்தரம், விஜயலட்சுமி, சந்தோஷ், உதவியாளர் சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் தலைமையில், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, உறுதி மொழி ஏற்று கொண்டனர்.