தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 100 சதவீத ஓட்டு போட வலியுறுத்தி விழிப்பு-ணர்வு

100 சதவீத ஓட்டு போட வலியுறுத்தி விழிப்பு-ணர்வு

100 சதவீத ஓட்டு போட வலியுறுத்தி விழிப்பு-ணர்வு


ADDED : மார் 28, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டியில், 100 சதவீத ஓட்டு போட வலியுறுத்தி கோலம் வரைந்து மகளிர் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், 100 சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி பல்வேறு இடங்-களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்-பினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய வளா-கத்தில் கோலம் வரைந்து, 100 சதவீதம் ஓட்ட-ளிப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.இதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்-குட்பட்ட, 19 ஊராட்சிகளிலும் மகளிர் திட்-டத்தின் மூலமாக, ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்-பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், தாசில்தார் பார்வதி, பி.டி.ஓ.,க்கள் தனலட்சுமி, நீலமேகம், தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, முதுநிலை ஆர்.ஐ., கார்த்திக், உதவி திட்ட அலுவலர் பாஸ்கர், வட்-டார மேலாளர் அருண்குமார், ரத்ன வேல் உள்-ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை (தனி) சட்டசபை தொகுதியில், 100 சதவீத ஓட்டுப்ப-திவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

ஊத்தங்கரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவ-லரும், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரு-மான சிவகுமார், ஊத்தங்கரை தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜ-லட்சுமி ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்-தனர். தேர்தல் தாசில்தார் சக்தி, மண்டல துணை தாசில்தார் நாகேந்திரன், வட்ட வழங்கல் அலு-வலர் ஜெயபால், வருவாய்த்துறை மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடையே வாக்-களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், நாடக கலைஞர்கள் பல்வேறு புராண கதாபாத்தி-ரங்கள் மற்றும் கலைநயமிக்க வேடங்களை அணிந்து கலை நிகழ்ச்சி நடத்தினர். ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்-றது.

எதிர்வரும் தேர்தலில் தகுதியுள்ள அனைவரும், ஜனநாயக கடமையை ஆற்றி, ஊத்தங்கரை தொகுதியில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்பதே, விழிப்புணர்வு பேர-ணியின் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தெரி-வித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us