/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உணவு பாதுகாப்பு துறை மூலம் பாப்பாரப்பட்டியில் விழிப்புணர்வு
/
உணவு பாதுகாப்பு துறை மூலம் பாப்பாரப்பட்டியில் விழிப்புணர்வு
உணவு பாதுகாப்பு துறை மூலம் பாப்பாரப்பட்டியில் விழிப்புணர்வு
உணவு பாதுகாப்பு துறை மூலம் பாப்பாரப்பட்டியில் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 11, 2025 01:37 AM
பாப்பாரப்பட்டி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்ரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார். இதில், உணவு பொருட்களில் வீட்டளவிலே கலப்படம் கண்டறிதல் குறித்தும், அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறிதல், செறி ஊட்டப்பட்ட உணவு பொருட்களான அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, பால் உள்ளிட்டவற்றில் சேர்க்கப்படும் நுண்ணுாட்ட சத்துக்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
உணவு பொருள் பாக்கெட்டுகளில் பெயர், தயாரிப்பு முகவரி, தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், அலர்ஜி தன்மை, சைவ, அசைவ குறியீடு, நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்டவை காணுதல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தில் உள்ள எல்.இ.டி., தொடுதிரை மூலம், உணவு பொருட்களில் கலப்படம் குறித்து, வீடியோ காட்சிகள் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக, பாப்பாரப்பட்டி பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் காணும் வகையில், திரையில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு காட்சிகள் திரையிடப்பட்டன.

