ADDED : செப் 10, 2026 02:17 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி சுதா, வழிகாட்டுதலின்படி மாவட்ட தேசத்திற்கான சமரசம், 3.0 இயக்கத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப-டுத்தும் நிகழ்ச்சி, தர்மபுரி புதிய புறநகர் பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.
மாவட்ட சமரச மையத்தின் செயலாளர் சார்பு நீதிபதி தமயந்தி, சமரசர்களான ராஜேந்திரன், மணிவண்ணன், பூபதி, ரமேஷ், கிருஷ்ணராணி ஆகியோருடன், வக்கீல் சங்க தலைவர் அழகுமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில், சமரசத்தின் மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்வதின் முக்கி-யத்துவம் மற்றும் அதன் பலன்கள் குறித்து, பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
