ADDED : நவ 24, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்ட-மைப்பு மற்றும் த.மு.மு.க., சார்பில், மது ஒழிப்பு மற்றும் வரதட்-சனை விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இஸ்லா-மிய கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் இம்ரான் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சலீம் வரவேற்றார். த.மு.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் இர்பான் பாஷா, மாநில துணை செயலாளர் முஹம்மத் ஜைனுாதீன் பேசினர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

