தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க விழிப்புணர்வு

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க விழிப்புணர்வு

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க விழிப்புணர்வு


ADDED : ஜன 15, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்: ஒகேனக்கல்லில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும், புகை-யில்லா போகி கொண்டாடவும், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தினமும் ஆயிரக்கணக்-கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கவும், புகையில்லா போகியை கொண்டா-டவும், விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு மாசுக்கட்-டுப்பாட்டு வாரியம், சுற்றுலாத்துறை மற்றும் வட்டார வளர்ச்சி துறை சார்பில் துாய்மை பணியாளர்கள், கூத்தப்பாடி பஞ்., பணி-யாளர்கள் ஒன்றிணைந்து

இப்பேரணி நடந்தது. ஒகேனக்கல் பஸ் ஸ்டாண்ட், அருவிக்கு செல்லக்

கூடிய நடைபாதை, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பேர-ணியாக சென்று அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி அச்சிடப்-பட்ட நோட்டீஸ் வழங்கி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்-தினர்.

பேரணியில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கீதா, பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us